பின்பற்றுபவர்கள்

புதன், 18 செப்டம்பர், 2013

காற்று வந்தால் தலை சாயும்...நாணல்...

காத்திருந்த கண்கள் திரைப் படத்தின் அனைத்து பாடல்களுமே அருமையான பாடல்கள். அனைத்துமே அப்போது நல்ல வெற்றிப் பெற்ற பாடல்கள்.
ஆனால் என்ன... இப்போது போல அப்படி முழுமையாக ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் பாராட்டப் பட்டால் அந்தப் படத்தை இன்னிசை மழை, புயல் என்று சொல்லிக் கொள்ளவில்லை.
சொல்லிக் கொள்ளத் தெரியாதவர்களாக இருந்தார்கள்.
பாடல்கள் வெற்றிப் பெற்றே அந்தப் புகழை படத்திற்க்கும், இசைக்கும்,  தயாரிப்பாளருக்கும் பெருமைகளை வாங்கித் தந்தது.

நாணல்...நானம் என்று சுசீலா அம்மாவின் குரலில் வார்த்தைகள் தேனாய் வழிகின்றன.
அபூர்வமான பாடல் இல்லையென்றாலும் அருமையான இந்தப் பாடலை கேட்டு மகிழ்வோம்.

திரைப் படம் : காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலாhttp://asoktamil.opendrive.com/files/Nl8xMDQxMDg4NF96ZDdxVl9jYzBj/Kaatru%20Vanthal%20thalai.mp3

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்
காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்
ஆற்றினிலே கரை புரளும்
வெள்ளம்
ஆசையிலே கரை புரளும்
உள்ளம்

ஆடைத் தொட்டு விளையாடும்
தென்றல்
ஆசைத் தொட்டு விளையாடும்
கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான்
வேதம்
இருவராக படிக்கச் சொல்லும்
காதல்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
மழை வரும் முன் வானை மூடும்
மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்
மோகம்
ஓடி வரும் நாடி வரும்
உறவு கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
மானும்
பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்றவுடன்
பாசதோடு சேர்ந்துக் கொள்வேன்
நானும்
நானும்
நாமும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கண்ணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும்
அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும்
கண்ணம்
கொஞ்சி வரும் வஞ்சி முகம்
கோபுரத்துக் கலசமென
அந்தி வெயில் நேரத்திலே
மின்னும்
மின்னி வரும் நேரத்திலே
மேனி கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்றுவிடும்
பொன்னும்
உள்ளம்
துள்ளும்

காற்று வந்தால் தலை சாயும்
நாணல்
காதல் வந்தால் தலை சாயும்
நானம்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

P.B.ஸ்ரீனிவாசின் அற்புத பாடும்திறமைக்கு கிடைத்த தீனிகளில் ஒன்றுதான் காத்திருந்த கண்கள் திரைப்படம். அனைத்துபாடல்களையும் அற்புதமாக பாடியிருப்பார். இந்த படத்தில் உள்ள ஒரு பாட்டில் ஒருஎழுத்துப்பிழை நிகழ்ந்திருப்பது தெரியுமா ? சீர்காழி பாடிய “ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் தரையினிலே “ ஆனால் “கரையினிலே” என்பது தான் சரியான வார்த்தையாகும் ஆனால் இந்த பிழை பாடல் ஒலிப்பதிவெல்லாம் முடிந்த பிறகு தான் கண்டறியப்பட்டு அப்படியே விடப்பட்டது.

Unknown சொன்னது…

புதிய விஷயம் ராஷீத் சார்! கவனிப்போம் விரைவில். நன்றி

கருத்துரையிடுக