பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 நவம்பர், 2013

உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல

சட்டென்று கேட்டவுடன் மனதை பற்றிக் கொள்ளும் ஒரு சாதாரண பாடல்.  எப்படி இப்படி என்பது புரியவில்லை. படத்தினை பற்றின மற்ற விபரங்கள் இல்லை. பல பாடல்கள் கலந்தடித்து ஒரு பாடலாகத் தெரிகின்றது. எது எப்படியோ மனதை கவரும் வகையில் உள்ளது.

திரைப் படம்: எங்கள் தாய் (1973)
நடிப்பு: சாவித்திரி, அசோகன்
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
இசை: M S விஸ்வனாதன்,
பாடியவர்கள்: S ஜானகி, ராஜேஷ் (டி எம் எஸ் போல முயற்சித்திருக்கிறார்)

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTgwMjgwM181QVhtMl82ODNi/UNKATHAI%20KODU%20ORU.mp3உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல

நீ சொல்லித்தர நான் பிள்ளை எல்லை அல்ல
வரும் வார்த்தை மட்டும் அன்பின் எல்லை அல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல

நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன்
நீ ஆரம்பித்தால் நான் அனுமதிப்பேன்
நீ அனுமதித்தால் நான் ஆரம்பிப்பேன்
நீ ஆரம்பித்தால் நான் அனுமதிப்பேன்

ஒரு நாளென்ன ஒரு பொழுதென்ன
நாம் நெருங்கி நெருங்கி மயங்கும் பொழுதில் ஒரு தடை என்ன

உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல

பால் கொதிப்பது போல் பெண் கொதிப்பதென்ன
தேள் துடிப்பது போல் கண் துடிப்பதென்ன
இது ஏனென்று இல மான் இன்று
உன்னை தொடர்ந்து தொடர்ந்து தழுவும் பொழுதில் வருவதில் என்ன
உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல

வான் மழைத்துளி போல் நான் பொழிந்திடவோ
தேன் மலர் சரம் போல் நான் குளிர்ந்திடவோ
இதழ் ஓரத்திலே மது சாரத்திலே
நாம் விழுந்து விழுந்து எழுந்த போதில் ஒரு சுகம் என்ன

உன் காதைக் கொடு ஒரு சேதி சொல்ல
இன்பக் காவியத்தில் முதல் பாதி சொல்ல

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்தப்பாடலை கேட்டதில்லை... நன்றி ஐயா...

கருத்துரையிடுக