பின்பற்றுபவர்கள்

திங்கள், 25 நவம்பர், 2013

சின்ன சின்ன பாப்பா சிங்கார பாப்பா (இரண்டு பாடல்கள்)

சுசீலா அம்மா தாலாட்டு பாடுவதைக் கேட்க வேண்டும். குரலில் என்ன ஒரு இனிமை, மேன்மை? இன்றைக்கு அவர் இந்தப் படத்தில்
சந்தோஷமாக பாடியதும் சோகமாக பாடியதுமாக இரண்டு
பாடல்களை பாடல் காட்சிகளோடு பதிந்திருக்கின்றேன். கேட்டு ரசித்துவிட்டு உங்கள் கருத்துகளை வழங்கவும்.

அது இருக்கட்டும் ஒரு புறம்.
இந்த சின்ன சின்ன பாப்பாவை வைத்து ஆரம்பமாகும் பாடல்கள் எத்தனை? அத்தனையும் எப்படி இவ்வளவு சிறப்பாக அமைந்தது?

சின்ன சின்ன ரோஜா  சிங்கார ரோஜா,
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா,
நேற்று நீ சின்ன பாப்பா,
சின்ன சின்ன பாப்பா வா பா என்று பல பாடல்கள்.

திரைப் படம்: ராணி யார் குழந்தை (1972)
பாடியவர்: P சுசீலா
இசை: T V ராஜு
பாடல்: தெரியவில்லை (பாடலின் போக்கைப் பார்த்தால் கண்ணதாசனாக இருக்கலாம்).
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மிhttp://asoktamil.opendrive.com/files/Nl8yNjA5NjcxNF9aTFAwUl85ZjA1/Chinna%20Chinna%20Papa-Rani%20Yaar%20Kulanthai.mp3


ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே
என் ஆசைப் பெண்ணே
பொன்னே பூவே
தாலேலோ
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

தாயும் பெண்ணே
தமிழும் பெண்ணே
நீயும் பெண்ணம்மா
ஆ ஆ ஆ ஆ
தாயும் பெண்ணே
தமிழும் பெண்ணே
நீயும் பெண்ணம்மா
ஆ ஆ ஆ ஆ

சந்தன சிலையே
குங்குமச் சிமிழே
உன் மொழி தேனம்மா
உன் மொழி தேனம்மா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

சிந்தாமணியில்
சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா
ஆ ஆ ஆ ஆ

சிந்தாமணியில்
சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா
ஆ ஆ ஆ ஆ

சித்திரை நிலவே
முத்திரை தருவே

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjA5NzAzMl9GVGRaRF8yMWVk/chinnachinnapaapa-sad-RaniYaarKuzhanthai.mp3
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
கண்ணான கண்ணே
என் ஆசைப் பெண்ணே
பொன்னே பூவே
தாலேலோ
ஆராரோ ஆரி ராரிரரோ
ஆராரோ ஆரி ராரிரரோ

சந்தன சிலையே
குங்குமச் சிமிழே
உன் மொழி தேனம்மா
உன் மொழி தேனம்மா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

சிந்தாமணியில்
சிதறிய மணிகள்
உந்தன் சிரிப்பம்மா
ஆ ஆ ஆ ஆ


சித்திரை நிலவே
முத்திரை தருவே
நித்திரைக் கொள்ளம்மா
நித்திரைக் கொள்ளம்மா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா

உறவுக் கொள்ளாமல்
ஒன்றைப் பெறாமல்
உனக்கு நான் அன்னையம்மா
ஆ ஆ ஆ ஆ
உண்மைகள் யாவும்
ஊமைகள் ஆனால்
மௌனமே அழுகையம்மா
மௌனமே அழுகையம்மா
ஆராரோ ஆரி ராரிரரோ
ஆராரோ ஆரி ராரிரரோ
2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் இனிமையான பாடல்...

Unknown சொன்னது…

வாங்க தனபால் ஸார், நன்றி.

கருத்துரையிடுக