பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 நவம்பர், 2013

வா வா என் வீணையே

எஸ் பி பியின் அருமையான இழுத்த இழுப்புகளுக்கு ஈடு கொடுத்து பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். அழகான இனிமையான பாடல். கமழும் நடிப்பில் பிண்ணியெடுத்திருக்கிறார்.


திரைப் படம்: சட்டம் (1983)
பாடல்: வாலி
இசை:கங்கை அமரன்
நடிப்பு: கமல், மாதவி
இயக்கம்: K விஜயன்
பாடியவர்கள்: SP  பாலசுப்ரமணியன் , வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTY1OTAzM19RQVVJNV81MjQ4/vaa%20vaa%20en%20veenaiye.mp3








வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

வா வா வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா ல லா

தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உன்தன்  ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உன்தன் ஞாபகம் கூட

துணை தேடுதோ
தனிமை துயர் கூடுதோ

அணை மீறுதோ
உணர்ச்சி அலை பாயுதோ

நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தானோ

வா வா உன் வீணை நான்
த ன னா
விரல் மீட்டும் வேளை தான்
த ன னா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா
கிள்ளாத முல்லையே
வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ என் மனம்
இன்ப நாடகம் போட
சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ என் மனம்
இன்ப நாடகம் போட

இரவாகலாம் இளமை
அரங்கேறலாம்

உறவாடலாம் இனிய
ஸுரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்கையில் ஆசைகள் தீரும்

வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா
மீட்டாமல் காதல் ராகம்
ஹோ ஹோ ஹோ

கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா

வா வா உன் வீணை நான்
ல ல ல
விரல் மீட்டும் வேளைதான்
ல ல ல ல 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் இனிமையான பாடல்...

Unknown சொன்னது…

கிணற்றுத் தவளை மாதிரி இருந்து கொண்டு நீர் செய்யும் கள்ள வேலைகள் எமக்குத் தெரியும் . முதலில் திருடுவதை நிறுத்தும். ஒரு வீடியோ பாடலை பதிவேற்றுவதற்கு நாம் படும் கஷ்டம் உமக்கு விளங்காது .

கருத்துரையிடுக