பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 4 மே, 2014

நேரம் பௌர்ணமி நேரம்

 எப்போதும் படப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து படங்களை வழங்கிய எம் ஜி யாரின் இனிமையான பாடல் அழகு குரல்களில்.

திரைப் படம்: மீனவ நண்பன் (1977)
இசை: M S விஸ்வநாதன்
குரல்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம்
இயக்கம்: C V ஸ்ரீதர்
பாடல்: வாலி
நடிப்பு: எம் ஜி யார், லதா



http://asoktamil.opendrive.com/files/Nl8zNzg5OTg1OV9qS2pVVF81ZmM2/neram%20pournami%20neram.mp3











நேரம் பௌர்ணமி நேரம்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

இளம் தென்றல் காற்றும்
குளிர் கொண்டு வாட்டும்
இளம் தென்றல் காற்றும்
குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க

அஹா

இணையும் வரையில் துடிக்க

ஓஹோ
இளமை கவிதை படிக்க
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில்
மிதப்பது என்ன தாகம்

தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம்
என்னவென்று காட்டும்

இன்றும் இன்னும் இன்னும்
இன்பரசம் காண வேண்டும்

பெண்மனசு கொஞ்ச கொஞ்ச
நாண வேண்டும்

நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும் சிறு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாரும்
தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊறும்
என்னிடத்தில் சேரும்

பூவிதல்கள் நான்கும்
பார்த்து பார்த்து எங்கும்
பூவிதல்கள் நான்கும்
பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும்
பழரசத்தை வாங்கும்

மிச்சம் என்ன உள்ளதென்று
பார்க்க வேண்டும்

அச்சம் வெட்கம் விட்டபின்பு
கேட்க வேண்டும்

நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும்
சிறு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வரிகளும் கலக்கல்...!

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

சரணத்தில் இடம் பெறும் வான் படைத்த மேகம் ! தான் கொடுத்த நீலம் இதில் மேகம், நீலம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் விதம் மிக அற்புதம் அது போல் சரணத்தில் வரிகளில் கடைசி வார்த்தைகள் அனைத்து கேட்க இனிமை !!

கருத்துரையிடுக