பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 மே, 2014

கோச்சடையான்......

கோச்சடையான்...... சிறுவர்களுக்கும் அல்லாமல்  பெரியவர்களுக்கும் அல்லாமல் ஓர் இரண்டும் கெட்டான் படம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் குழந்தைகளும் கொட்டாவி  விட ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவர்களும்  நெளிய ஆரம்பித்து விட்டார்கள். நல்ல வேளையாக 2 மணி நேரத்தில் படத்தை முடித்து மரியாதையை காப்பாற்றிக் கொண்டார்கள்.
மொத்தத்தில் ஒரு நாட்டிய நாடகம் பார்த்த அனுபவம்தான்.
நவீன தொழில் நுட்பத்தை முழுமையாக உபயோகித்திருக்கிறார்கள்.
கோச்சடையான்......சடையான்?

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவ்வளவு தானா...?

Unknown சொன்னது…

இனிமையான சுத்த தமிழில் மென்மையான இசையில் 20 வருடங்களுக்கு முன் வந்தது போல பாடல்கள். எஸ் பி பியின் குரலில் பாடல்கள் என நிறைய உள்ளதுதான். ஆனால் திகட்டிவிட்டது போல தொடர்ந்து பாடல்களே வசனங்கள் போல ஆகிவிட்டது. எப்படியும் 4/5 மணி நேரம் ஓடியிருக்க வேண்டிய படமாக இருந்திருக்கும்.இந்த நான்கு வருடங்களாக இதை 2 மணி நேரத்திற்கு குறைக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்கே ரஜினியும் படுகோனேயும் நாசரும் நடித்திருக்கிறார்கள்: எல்லாம் animation, graphicsதானே? இருக்கிறவர்களை வைத்து திறமையாக நடிக்க வைத்து பெயர் வாங்குவார்களா அல்லது ரஜினியை பொம்மையாக்கி படமாக்கிவிட்டு ரஜினி நடித்த படம் என விளம்பரம் செய்வார்களா? இது ரஜினி ரசிகர்களை வேண்டுமானால் நம்பவைக்கலாம்.

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

ஒரு பொம்மை (animation) படத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லை தான். ஆனால் சோட்டா பீம், பார்க்கும் பிள்ளைகளுக்கு இதெல்லாம் ஒரு பெரியதாக தெரியாது. ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட கொஞ்சமும் தகுதியில்லை ! அதற்கு தமிழ் சினிமா இன்னும் தொழில்நுட்ப ரீதியாக, மின்னணு உபகரணங்கள், தொழில்நுட்ப அறிஞர்கள் இப்படி ரொம்ப தேறவேண்டும்

கருத்துரையிடுக