பின்பற்றுபவர்கள்

வியாழன், 29 மே, 2014

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

மறைந்த இசையமைப்பாளர் சந்திரபோஸிடமிருந்து இனிமையான பாடல் வழக்கம் போல. K J யேசுதாசும் K S சித்ராவும் தனித்  தனியே பாடியிருக்கும் பாடல்கள் கீழே.

திரைப் படம்: வசந்தி (1988)
பாடியவர்கள்: K J யேசுதாஸ் மற்றும் K S சித்ரா
இசை: சந்திரபோஸ்
பாடல்: வைரமுத்து
இயக்கம்: சித்ராலயா கோபு
நடிப்பு: மோகன், மாதுரி
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆளுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை
பிறப்பதில் கூட துயரிருக்கும்
பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும்
வலி வந்துதானே வழி பிறக்கும்.
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
ஊருக்குச்சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்தபோது வெளிச்சமுண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூ மொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்
பாதையை அன்பே திறந்து விடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிடும்.
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆளுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அடிக்கடி கேட்கும் பாடல்... மனதை அமைதி படுத்தும் இனிமையான பாடல்...

SANKAR சொன்னது…

ஒரு திரைப்படத்தை ரீமிக்ஸ் செய்வார்கள்.ஆனால் நம்ம வைரமுத்து இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து யூத் படத்தில் "சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையில் பாதி பலம் சந்தோசம் இல்லையென்றால் மனிதற்கு ஏது பலம் " என்று எழுதியுள்ளார்.

கருத்துரையிடுக