பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன் (2 versions)


திரு தாஸ் அவர்கள் விரும்பிய பாடல். அவருக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பிடித்த பாடல்தான். அழகான தென்றல் வீசும் பூ மணக்கும் பின்னனி இசையும் குரல்களும் நம்மை வசீகரிக்கின்றன. காதலையும் சோகத்தையும் கேட்டும், பார்த்தும் மகிழ்வோம்.

மன்னிக்கவும். சில விபரங்களை தவறாக கொடுத்துவிட்டேன். இதோ சரியான தகவல்கள்.
திரைப் படம்: போலிஸ்காரன் மகள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: P B S, S ஜானகி
பாடல்:  கண்ணதாசன்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரிசோகமாக பாடியது:இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களில் அரும்பாவாள்
உன் மனதுக்கு கரும்பாவாள்
இன்று அலை கடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
எனும் வேதனை கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரி தானா

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்து விட்டாள்
என அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும்
இவள் சொன்னது சரி தானா
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்


 சோகத்தில்.....


இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

வண்ண மலர்களில் சருகானாள்
அவள் அனலிடை மெழுகானாள்
பெரும் அலை கடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ

இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீராயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்

அவள் உறவினை மறந்துவிட்டாள்
இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள்
தினம் கனவுக்கு துணைப் போனாள்
அவள் கவலையை தீராயோ
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீராயோ
2 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

இரசித்தேன்.

பெயரில்லா சொன்னது…

மிக்க நன்றி அசோக் அவர்களே !

நினைவு சுழிக்குள் மூழ்கிய பாடல்கள் பலவற்றை மீட்டெடுத்து வந்து எங்களை கிளிக் செய்ய வைத்ததற்கு கோடி நன்றிகள்.

வாழ்த்துக்கள்.

அன்பன்
தாஸ்

கருத்துரையிடுக