பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லாம் கொண்டவன்

கண்ணன் பாடல்கள் வரிசையில் பொதுவாக கண்ணதாசன் கொடி நாட்டிய காலத்தில் வாலி புகுந்த ஆரம்பக் கால பாடல். சாதாரண எளிதான வார்த்தைகளில் இலக்கியம் போல ஒரு பாடல் இயற்றிவிட்டார். அதற்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள் இசையமைப்பாளரும் பாடகரும்.
மென்மையாக அமைதியாக ஒரு பாடல்.

திரைப் படம்: கல்யாண ஊர்வலம் (1970)
இசை: M G ராதாகிருஷ்ணன்
பாடல்: வாலி
குரல்: P சுசீலா
நடிப்பு: நாகேஷ்,K R  விஜயா
இயக்கம்: K S சேது மாதவன்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்

இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்
இன்ப கீதம் பொழிந்திடவே குழல் ஊதுவான்
அதில் தெய்வ ஞானம் வழிந்திடவே குழல் ஊதுவான்
மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
மாந்தரெல்லாம் மகிழ்ந்திடவே குழல் ஊதுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்
தெய்வ பண்ணாலே எல்லார்க்கும் அமுதூட்டுவான்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்

பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்
பாலரோடு கோபாலன் விளையாடுவான்
இளம் கோபியரும் களித்திடவே விளையாடுவான்

முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
முதியோரும் மகிழ்ந்திடவே விளையாடுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்
அந்த விளையாட்டில் வேதங்கள் நிலை நாட்டுவான்

எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
காணும் எழிலெல்லாம் கொண்டவன் கண்ணன் கண்ணன்
எந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன்
எந்தன் கண்ணன் கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக