அரிதான பாடலாகி போனது. பெண்ணுக்கும் அணைக்கும் உவமை காட்டி வித்தியாசமாய் அமைந்த பாடல்.
திரைப் படம்: தபால்காரன் தங்கை (1970)
குரல்கள்: T M S, P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன் நடிப்பு: ஜெமினி, முத்துராமன், வாணிஸ்ரீ
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால் காதல் பெருக்கெடுத்தால்
புகலிடம் பெண்ணிடம்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது - அணை
பழுதில்லாமல் காலங்களை வென்றது
பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது - அணை
பழுதில்லாமல் காலங்களை வென்றது
அந்த கால பெண்மை போன்ற அணை இது - குலம்
அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது
அந்த கால பெண்மை போன்ற அணை இது - குலம்
அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
காவிரியின் கெண்டை என்ன துள்ளுது - உன்
கண்ணை பார்த்து சொந்தம் என்று சொல்லுது
தேக்கிய நீர் திறந்து விட்டால் வெள்ளமே -ஆசை
தேக்கியதை திறந்து விட்டால் வேகமே
சோழன்..
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை..
மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான்
கண்களுக்குள் கட்டி வைத்தேன் என் கண்ணனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக