திருமதி சுசீலா அவர்களின் பாடலுக்கு என்ன கருத்து சொல்வது? எல்லாமே அருமைதான். ஆரம்ப இசையே மனதை மயக்கும்.
திரைப் படம்: பாச மலர் (1960).
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, ஜெமினி
இயக்கம்: பீம் ஸிங்
பாடல்: கண்ணதாசன்இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது திரு வாய் மொழியாலே ...
திரு வாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
திரு வாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
1 கருத்து:
அருமையான பாடல்
அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே
கருத்துரையிடுக