பின்பற்றுபவர்கள்

சனி, 20 ஆகஸ்ட், 2011

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்

நல்ல இனிமையான அபூர்வ பாடல் ஒன்று

திரைப் படம்: குளிர் கால மேகங்கள் (1986)
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: அர்ஜுன், சாதனா சர்கம்
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்கள்:  SPB, வாணி ஜெயராம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்

சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்
இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

இது ஒரு இளமை நாடகம்
இணைந்தது இருவர் ஜாதகம்
நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மூங்கில் மரங்களில் ஏழு ஸ்வரங்களில்
பாடல் எழுதிடும் காற்று
மேனி தீண்டுமோ
மனதில் ஒரு மோகம் தோன்றுமோ

தோளைத் தழுவிய ஆடை நழுவிட
தோகை அழகினை பார்க்க
ஏக்கம் ஆனதோ
இரவினில் தூக்கம் போனதோ

வாலிபம் வாட்டும்போது
வேரொரு நரகம் ஏது
பூவுடல் வாடும்போது
தென்றலை நீ விடு தூது

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

இது ஒரு இளமை நாடகம்
இணைந்தது இருவர் ஜாதகம்
நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

நேற்று இரவினில் நீண்ட கனவினில்
நீயும் நெருங்கிட கண்டேன்
மோகம் விளைந்தது வியர்வை வர
தேகம் நனைந்தது

காலை விடியலில் காணும் கனவுகள்
நாளை பலித்திடும் கண்ணே
மாலை சூடலாம் முதல் இரவில்
லீலை காணலாம்

நாயகன் நீயும் தாங்க
வாய் இதழ் தேனை வாங்க
ஆனந்த கங்கை பொங்கும்
அழகிய தேகம் எங்கும்
இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

இது ஒரு இளமை நாடகம்
இணைந்தது இருவர் ஜாதகம்
நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்

இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையை தேடும் இதழை தேடும் மணிவிழி நீலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக