பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா

நடிகை பாரதி பாடிய முதல் பாடல். கொஞ்சம் அங்கே இங்கே தடுமாற்றம் இருந்தாலும் T M S ஈடுகட்டிவிடுகிறார். இனிமையாக இருக்கிறது.

திரைப் படம்: சினேகிதி (1970)
இசை: M S சுப்பையா நாயுடு
இயக்கம்: மல்லியம் ராஜகோபால்
நடிப்பு: ஜெமினி, பாரதி
http://asoktamil.opendrive.com/files/Nl8zODUxNjE0Ml9icHpLUV9kZWQw/thanga%20nilavey.mp3

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹாஹா ஹா ஹ்ஹோ ஹோ ஹோ ல ல ல
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
ஹூஹூம்

நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா

கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே
ஹா ஹா ஹா ல ல ல ல
கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே
கனிவு பொங்கும் கவிதை ஒன்றை உலகில் காண முடியுமா

உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில்
ஹா ஹா ஹா ஹாஹா
உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில்
உள்ளம் என்ற வெள்ளக் காட்டின் இன்பம் தாங்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா

ஆடைத் தொட்டு இழுக்கும் போது போதும் போதும்
ம் ம் ம்ஹூம்
ஆடைத் தொட்டு இழுக்கும் போது போதும் போதும் என்பதில்
ஆசை இல்லை என்பதாக அர்த்தம் காண முடியுமா
மூடிவைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே

வேண்டுமென்ற அர்த்தம் இன்றி வேறு காண முடியுமா

தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
நீ இல்லாமல் எந்தன் வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
தனிமை காண முடியுமா

1 கருத்து:

கருத்துரையிடுக