பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தலைவா நான் வரவா தனிமை என்னை அழைக்குது முதல் முறையா


இந்தப் பாடல் திரு தேவாவின் ஏதோ ஒரு பழைய பாடலை ஞாபகப்படுத்துகிறது. (கொஞ்ச நாள் பொறு தலைவா.....) மறந்து போய் நகல் எடுத்திருப்பார் போலிருக்கிறது.  எப்படியோ போகட்டும். பாட்டு நல்லாத்தான் இருக்கு.திரைப் படம்: காந்தி பிறந்த மண் (1995)

நடிப்பு: விஜயகாந்த், ரேவதி, ரவளி

இயக்கம்: R சுந்தரராஜன்

குரல்கள்: S ஜானகி, குழந்தை வேலன் (யாரிவர்???? நல்ல குரல்)

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையாதலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம் தர வா

தங்கக் கொலுசு என்னை தழுவிய போது

தன்னந் தனிமையில் தவிக்குது மாது

தஞ்சம் தஞ்சம் இனி தவிப்பது ஏதுதலைவா நான் வரவா

தழுவி இனி புதுப்புது சுகம் தரவா

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்நெத்தியில் வச்ச பொட்டு நான் உனக்காக

மத்ததை நான் சொல்ல வா உனக்காக

கார்த்திகை போனதும் மார்கழி மாசம்

மேளத்த கொட்டி வந்து தோளுல சாயும்

தலைமுறை காண தலையணை வேணும்

தலைவனே அதுக்கொரு பதில் தர வேணும்

நித்தம் நித்தம் இந்த பூவை சூடதலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம் தரவாஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பட்டப்பகல் நிலவு போல நானிருந்தேன்

உன்னோட பார்வை பட்டு பௌர்ணமி ஆனேன்

தொட்டில் கட்டி அந்த வானத்து மேலே

நிலவுடன் நான் விளையாடவும் வேணும்

மறுநாள் இதுபோல் நான் வர வேணும்

மறுபடி நீ வர மாதங்கள் ஆகும்

போதும் போதும் இந்த பார்வை போதும்தலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம் தரவா

தங்கக் கொலுசு என்னை தழுவிய போது

தன்னந் தனிமையில் தவிக்கிறேன் நானு

தஞ்சம் தஞ்சம் இனி தவிப்பது ஏதுதலைவா நான் வரவா

தனிமை என்னை அழைக்குது முதல் முறையா

தலை முதல் பாதம் வரை

தழுவி இனி புதுப்புது சுகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக