பின்பற்றுபவர்கள்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

காதல் ஜோதி அணையாதது கண் கண்ட கனவெல்லாம் கலையாதது

ஆரம்ப கால SPBயின் குரல் இனிமை தனிதான். தங்கு தடங்கல் இல்லாத பாடலின் ஓட்டம் அருமை. நினைவை விட்டு அகலாத  ஒரு அபூர்வ பாடல்.

திரைப் படம்: காதல் ஜோதி (1970)
இசை: T K ராமமூர்த்தி
குரல்கள்: S P B, P சுசீலா
நடிப்பு: ரவிசந்திரன், ஜெய்ஷங்கர், காஞ்சனா
இயக்கம்: திருமலை மகாலிங்கம்
 


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காதல்
ம் ம் ம் ம்
ஜோதி
ம் ம் ம் ம் ம்
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
கலையாதது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
உறவாடுது

நீர் கொண்ட மேகம் பொதுவானது
நிலம் பார்த்து நீரை பொழியாதது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

குளிர் கொண்ட காற்று நடை போடுது
கொடி கொண்ட பூவில் குடியேறுது
மை வைத்த கிண்ணம்தான் விழியல்லவா
நானும் மன வாசல் நுழைகின்ற வழியல்லவா
இள நெஞ்சமா
மலர் மஞ்சமா
இதழோரமா
சுவை கொஞ்சமா

காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
உறவாடுது

அன்பென்ற பாடல் உருவானது
அரங்கேற்ற வேண்டும் பொழுதானது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அழகென்ற மேடை எதிர்ப்பார்க்குது
வாவென்று ஜாடை வரவேற்குது
புது வெள்ளம் அணை தாண்டி விழும் அல்லவா
பாவை பூ மேனி நீராட வருமல்லவா
இடை துள்ளுமா
நடை பின்னுமா
இது போதுமா
இனும் வேணுமா

காதல் ஜோதி அணையாதது
கண் கண்ட கனவெல்லாம் கலையாதது
ஊரும் உறவும் அணை போடுது
உன்னோடு என் ஆசை உறவாடுது
உறவாடுது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக