பின்பற்றுபவர்கள்

சனி, 6 ஆகஸ்ட், 2011

கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

நல்ல இனிமையான பாடல். எல்லோரும் காதலிக்கும் போது செய்யும் சத்தியம்தான். ஆனால் கவிஞர் இனிமையாக செய்திருக்கிறார். அதையும் இனிமை குறையாமல் இசையமைத்து பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: ராதா (1973)

இயக்கம்:  A C திருலோகசந்தர்
இசை: ஷங்கர் கணேஷ்
குரல்கள்: S P B, சுசீலா
நடிப்பு: முத்துராமன், பிரமிளா


கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...உயிர் காதல் மீது ஆணை..காதல் மீது ஆணை.. வேறு கை தொடமாட்டேன்...

கை தொடமாட்டேன்...கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

பச்சை புல்லில் மெத்தை விரித்து..பஞ்சவர்ண கிள்ளை இரண்டு இச்சை தீர கட்டிபுறண்டு விளையாடும் போது...பட்ட பகல் நேரமென்று பெட்டை மயங்க...ஆசைக்கென்ன வெட்கமென்று ஆணும் நெருங்க...இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ...

இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ...கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...உயிர் காதல் மீது ஆணை..காதல் மீது ஆணை.. வேறு கை தொடமாட்டேன்...

கை தொடமாட்டேன்...கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...பனியிட்ட முத்தம் மலரில்...கனியிட்ட முத்தம் கிளையில்...முகில் இட்ட முத்தம் மலையில் நான் பார்க்கிறேன்...கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில்...தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில்...மணப் பந்தல் மாலையெல்லாம் வரவேண்டுமோ...

மணப் பந்தல் மாலையெல்லாம் வரவேண்டுமோ...

கடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக