பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே

சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் அருமையான இசையில் இந்தப் பாடல். காட்சியும் பிரமாதமாக இருக்கும்.

திரைப் படம்: நீலவானம் (1965)
பாடியவர்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, தேவிகா
வசனம்: K பாலசந்தர்
இயக்கம்: P மாதவன்


ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்

வருஷந்தோரும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
வருஷந்தோரும் வசந்தம் தேடி வருவோம் இங்கே
வாடைக் காற்றில் மூடும் பனியில் மகிழ்வோம் இங்கே
ஒன்று சேரும் அந்த நேரம் பிள்ளை போலே ஆடலாம்
ஆடி ஆடி காலம் மாறி அன்னை தந்தை ஆகலாம்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்
ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா
மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா
நீலவானம் சாட்சியாக இன்று போலே வாழுவோம்
கால தேவன் கோவில் மீது பாச தீபம் காணுவோம்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே
ஓடோடி சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
நீராடும் எந்தன் ஆசை நெஞ்சின்
நிலையை சொல்லுங்களேன்

ஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக