பின்பற்றுபவர்கள்

புதன், 3 ஆகஸ்ட், 2011

தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை

மெல்லிய மென்மையான பின்னனி இசையுடன் ஒரு இனிமையான சமீபத்திய பாடல் கண்ணொளியுடன்.


திரைப் படம்: தந்துவிட்டேன் என்னை (1991)
நடிப்பு: விக்ரம், ரோகிணி
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்கள்: மனோ, S ஜானகிதென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் என்னாளும் உன் ராஜாங்கமே
ஹா ஹா ஹா ஹா ஹா
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ


ஆடை மூடி பேச வந்து
ஆடும் தென்றல் காற்று நீ
ஆசையோடு பூத்தது இந்த ரோஜா
மேடை மீது பாட வந்த
வேந்தன் உன்னை பார்த்ததும்
தேகம் முல்லை தோட்டம் ஆகும் ராஜா
பூவை நெஞ்சில் பூட்டி வைத்த
வைரம் கையில் வந்தது
பாவை உள்ளம் தாழ் திறந்து
பாடல் ஒன்று தந்தது
வெள்ளி ரதம் வருமா
வீதியில் சுகமா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் என்னாளும் உன் ராஜாங்கமே
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ


மேகம் என்னும் தேரில் ஏறி
ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்
மேள தாளம் கேட்கும் நல்ல நேரம்
பூமி எங்கும் பூக்கள் கொண்டு
வானவில்லில் கோர்க்கலாம்
காம தேவன் கோபம் இங்கு தீரும்
ராஜ ராஜ ராதை
இந்த ராணி ராகம் பாடினாள்
ராக தேவன் தந்த அன்பு
மாலை ஒன்று சூடினாள்
வெள்ளி மழை விழுமா
வீணையில் ஸ்வரமா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.


தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மன்னன் நீ
திங்கள் நீ திங்கள் நீ
தேடி வந்த கண்ணன் நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் என்னாளும் உன் ராஜாங்கமே
ஹா ஹா ஹா ஹோஹோ ஹா ஹா ஹா ஹா
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக