பின்பற்றுபவர்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது என் கனவில் இந்த பூ பூத்தது


நல்ல இனிமையான பாடல் ஒன்று இன்றும்.
இந்த திரைப் படத்தினை பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை.

திரைப் படம்: சொந்தம் 16 (1989)
குரல்கள்: சித்ரா, மனோ
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: மோகன்http://www.divshare.com/download/15622608-2a1

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்மணி நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
உன் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்ணனே நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது உன்னை நான் பார்த்தது

காதலன் வந்தொரு மன்மத மந்திரம் காதினில் ஓதிட
வாடாதோ தேகம்தான்
ஆ ஆ ஆ ஆ ஆ வாடிய வேளையில் வாலிப மேகமும் வேர்களில் நீர் விட
தீராதோ தாகம்தான்
கொடுத்தால் எடுத்தால் சுகம் கோடி காணலாம்
கொடுத்தால் எடுத்தால் சுகம் கோடி காணலாம்
ஆ ஆ ஆ தோள்கள் மீது சாயும்போது தேவை இல்லை பூ மஞ்சம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்ணனே நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்
ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது உன்னை நான் பார்த்தது

ஆ ஆ ஆ ஊர்வசி மேனகை போல் ஒரு பூனகை காட்டிடும் தேவதை
நீதானோ சொல்லம்மா
ஆ ஆ ஆ ஓர் புறம் குளிர்ந்திட ஓர் புறம் கொதித்திட
ஏக்கங்கள் தாக்குது ஏந்தானோ அம்மம்மா
மண நாள் வரலாம் ஒரு மாலை சூடலாம்
மண நாள் வரலாம் ஒரு மாலை சூடலாம்
மீண்டும் மீண்டும் தீண்டும்போது பாய்வதென்ன தேன் வெள்ளம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது
நீதான் கண்மணி நெஞ்சில் வாழும் காவியம்
நேரில் வந்த ஓவியம்

ஓர் இரவில் உன்னை நான் பார்த்தது
என் கனவில் இந்த பூ பூத்தது இந்த பூ பூத்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக