பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மதனோர்சவம் ரதியோடு தான், அழகோவியம் உயிரானது.. 2 பாடல்கள்

S P B மற்றும் வாணி ஜெயராமுக்கு சவாலான பாடலாக அமைந்தது.
V குமார் அவர்களின் இசையில் அற்புதமான பாடல். அடுத்து தொடரும் பாடல் ஆதித்யா இசையில் முந்தைய பாடலின் சாயலில் வருகிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!!!


திரைப் படம்: சதுரங்கம் (1978)

இயக்கம்: துரை

நடிப்பு; ரஜினி, ஜெயசித்ரா


மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்

உயிரோவியம் உனக்காக தான்
உடல் வண்ணமே அதற்காக தான்

மீன் ஆடும் கண்ணில் விழுந்து
நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில்
நீராடவோ
மீன் ஆடும் கண்ணில் விழுந்து
நான் ஆடவோ
தேன் ஆடும் செவ்விதழ் தன்னில்
நீராடவோ

புரியாத பெண்மை இது
பூப்போன்ற மென்மை இது
பொன்னந்தி மாலை
என்னென்ன லீலை
மதனோர்சவம் ரதியோடு தான்
ரதி தேவியோ பதியோடு தான்

கார் கால மேகம் திரண்டு
குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு
சதிராடுது
கார் கால மேகம் திரண்டு
குழலானது
கண்ணா உன் கையில் புரண்டு
சதிராடுது
ஓ ஓ ஓ
அலங்கார தேவி முகம்
அடங்காத ஆசை தரும்
ஒன்றான நேரம்
ஒரு கோடி இன்பம்

மதனோர்சவம்
ம் ம் ம் ரதியோடு தான்
ஆ ஆ ஆ ரதி தேவியோ
பதியோடு தான்திரைப் படம்: ரோஜா மலரே (1997)

இசை: ஆதித்யன்
பாடல் வரிகள்: T M ஜெயமுருகன்
பாடியவர்: S P B
நடிப்பு: முரளி, ரீவா

அழகோவியம் உயிரானது..
புவிமீதிலே நடமாடுது..
கவி ஆயிரம் மனம் பாடுது..
புது காவியம் அரங்கேறுது..
லவ்லி லிசா...மோனலிசா...
லவ்லி லிசா...மோனலிசா...

அழகோவியம் உயிரானது..
புவிமீதிலே நடமாடுது..

என் கவியானவள், கண்ணில் வந்து கலையானவள்
என் கனவானவள், நினைவில் வந்து இனிதானவள்
இசையானவள்..நிலையானவள்
என் வானிலே நிலவானவள்
மலர் முகம் மனம் தொடும்
தினம் தினம் மணம் தரும்
லவ்லி லிசா...மோனலிசா...

ஹா ஹா ஹா ஹா....அழகோவியம் உயிரானது..

என் உயிரானவள், புனிதம் ஆன உறவானவள்
என் வாழ்வானவள், வசந்தம் தந்து நிறைவானவள்
புதிரானவள்..புகழ்மான் அவள்
மனதாள்பவள்..ஆஹ் ஆஹ் ..மலர் என்னவள்
அவள் ஒரு தனித்துவம்
அதில் ஒரு தனி சுகம்
லவ்லி லிசா...ஹே ஹே மோனலிசா...

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்...

அழகோவியம் உயிரானது..
புவிமீதிலே நடமாடுது..
கவி ஆயிரம் மனம் பாடுது..
புது காவியம் அரங்கேறுது..
லவ்லி லிசா...மோனலிசா...

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

மதனோர்ச்சவம் பாடல் என்னையும் கவர்ந்த பாடல்.

சங்கர் நெல்லை சொன்னது…

சதுரங்கம் படத்துக்கு கதை வசனம் விசு.ரஜினி ஜோடி பிரமீளா.இதே கதையை "பெண்மணி அவள் கண்மணி"எண் பெயரில் ரீமேக் பண்ணினார்.

கருத்துரையிடுக