பின்பற்றுபவர்கள்

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மகாராணி உனைத் தேடி வரும் நேரமே

நல்லதொரு இனிமையான பாடல்


திரைப் படம்: ஆயிரம் வாசல் இதயம் (1980)
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சுதாகர், ராதிகா
இயக்கம்: A ஜெகன்னாதன்



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ ஆ ஆ அ
மகாராணி உனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே
தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி
மகாராணி உனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பைங்கிளி இவள் மொழி
தமிழ் தமிழ் பைந்தமிழ்

பாடிடும் அதன் சுகம்
தரும் தரும் செவ்விதழ்

வழங்கும் தினம் மயங்கும்
அதில் உலகை மறக்கலாம்

கை வந்து தொட்டது மெல்ல
காமத்து பாலுரை சொல்ல
இளமை பயிலும் தினம்
மகாராணி எனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

பார் வழி பனி துளி பூவிதழ் சேருமோ
பூவிதழ் சிலிர்த்திட அது தொடும் பாதமோ
சிலிர்க்கும் இதழ் விரிக்கும் தன்னை மறந்த நிலையிலே

தென் பாண்டி முத்துகள் போலே

என்னென்ன கோலங்கள் மேலே

ரசிக்கும் கவிதை மனம்

மகாராணி எனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே

தென்றல் தேரில் வருவான்
அந்த காமன் விடுவான்
கணை இவள் விழி

மகாராணி உனைத் தேடி வரும் நேரமே
எங்கும் குழல் நாதமே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக