ஷ்யாம் இசையில் அப்போதைய காலக் கட்டத்தில் வித்தியாசமான் நடையில் இந்த பாடல். மென்மையான பாடல்.
திரைப் படம்: உணர்ச்சிகள் (1976)
பாடியவர்கள்: S P B , ஜானகி
நடிப்பு: கமல், ஸ்ரீவித்யா
இயக்கம்: R C சக்தி
இசை: ஷ்யாம்
ஹே ஹே
லலல்லா
ஹே ஹே
லலல்லா
லலல்ல லல்லா
ஆஹா
லலல்ல லல்லா
ஹேஹே
லலல்ல லல்லா
ஆஹா
லலல்ல லல்லா
ஹேஹே
லல்லல் லல்ல லல்லலல்
லல்லல் லல்ல லல்லலல்
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளிவீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ
கனிவோடு காதல் கைதொட்ட வேளை
கல்யாண மேடை அலங்கரிக்காதோ
இதயத்தின் பாரம் இறங்கிடும் நேரம்
இருமனம் கூடும் உணர்ச்சியில் ஆடும்
வரும் வெள்ளம் இளம் உள்ளமும்
ஒரே வேகமாய் ஓடாதோ
அதன் சங்கமம் பெறும் மங்கலம்
உயிர் கீதமாய் பாடாதோ
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசி பெண்மை ஒளிவீசி
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்
தாபத்தை நானே சொல்லவோ
துணை தேடும் பாவை உனை நாடும் போது
தூண்டிலில் மீனாய் துடிப்பதும் ஏனோ
பருவத்தின் ஏக்கம் துளிர் விடும் போது
உறவினைத் தேடும் உணர்ச்சிகள் மோதும்
மலர் மேடையில் மது ஓடையில்
புனல் ஆடுவோம் வாராயோ
உனைக் கண்டதும் மனம் சொன்னது
சுகம் தேடுவோம் வாராயோ
நெஞ்சத்தில்
போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசி
பெண்மை ஒளிவீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசைதீர நீ தொட வேண்டும்
தாபத்தை
நானே சொல்லவோ
1 கருத்து:
இந்த பாடலில் முதல் சரணத்தில் முதல்வரி #தனிமையின் தீயில் குளிர்ந்திட்ட பூவை காளை என் மார்பில் குடியேரலாமோ# என தொடங்கும். பெரும்பாலும் இந்த வரி Audio வில் இல்லை. Movie ல் இருக்கு
கருத்துரையிடுக