பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 அக்டோபர், 2011

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

அழகான இசையில் அருமையான அமைதியான, மனதை இதமாக வருடும்  பாடல் இன்று.

திரைப் படம்: ஜீவ நாடி (1970)
இசை: V தக்ஷிணாமூர்த்தி
குரல்கள்: K J யேஸுதாஸ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இயக்கம்: A K சுப்ரமணியம்
நடிப்பு: ரவிசந்திரன், லக்ஷ்மி

Listen Music - Upload Audio -

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

பொதிகை மலை மழைச் சாரல்...உந்தன் பூவிதழின் மதுச் சாரல்....

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தேனொழுகும் குயிலோசை...என் தலைவா உன் தமிழோசை...

தவழ்ந்து வரும் குளிர் காற்று...அது சுமந்து வரும் உன் புது பாட்டு...

தேனொழுகும் குயிலோசை...

கடல் கொண்ட நீலம் கண் விழி வாங்க...

கனி கொண்ட சாரு இதழ்களில் தேங்க...

நீர் கொண்ட மேகம் கூந்தலில் நீந்த...

நேர் வந்து நின்றேன் கைகளில் ஏந்த...

அருவி மகள் அலை ஓசை

மடல் கொண்ட காளை வாவென்று சொல்ல...

குளிர் கொண்ட வாடை ஆசையில் துள்ள...

உடல் ஒன்று சேர்ந்து உறவொன்று கொள்ள...

உயிர் கொண்ட இன்பம் நான் என்ன சொல்ல...

தேனொழுகும் குயிலோசை...என் தலைவா உன் தமிழோசை...

அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை...

அருவி மகள் அலை ஓசை....

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஏசுதாஸின் குரல் எப்போதும் மயக்க வல்லது. இப்பாடலில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் சேர்ந்து கேட்கையில் மயக்குகிறது. அருமையான பாடல்!

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

very very rare song. வெகு நாட்கள் தேடி கிடைத்த பாடல்

கருத்துரையிடுக