பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 அக்டோபர், 2011

தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த திருமகள் குங்குமம் வாழ்கவே காக்கும் தேவதை வாழ்கவே


இதுவும் திரு தாஸ் அவர்களின்  விருப்பமான பாடல்தான். இந்தப் பாடலும் அப்போது பெண்களுக்கு மிகப் பிடித்தமான பாடலாக இருந்தது. ஒரு தாயின் தியாகத்தை விளக்கும் பாடல் இது

திரைப் படம்: தீர்க்க சுமங்கலி (1974)
இசை: M S விஸ்வனாதன்
குரல்: வாணி ஜெயராம்
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு: முத்துராமன், K R விஜயா



http://www.divshare.com/download/15998491-fc5


தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
காவலில் நல்லரம் வாழ்கவே

மக்கள் சுற்றமும் மங்கள மனையும்
மான் போல் மானமும் கொண்டவளாம்
மக்கள் சுற்றமும் மங்கள மனையும்
மான் போல் மானமும் கொண்டவளாம்

வாழ்வினில் பேறு பதினாரெனவே
வரிசைகள் யாவும் கண்டவளாம்
தாய்மை வாய்மை நேர்மையாவிலும்
தானே தலையாய் நின்றவளாம்
தானே தலையாய் நின்றவளாம்
தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
காவலில் நல்லரம் வாழ்கவே

ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து
உள்ளத்தில் காக்கும் குலமகளாம்
ஒரு மகள் தன்னை கண்களில் வைத்து
உள்ளத்தில் காக்கும் குலமகளாம்

மருமகள் தன்னை தன் மகள் போலே
மார்பினில் காக்கும் திருமகளாம்
நாயகன் வாழ்வில் துணையென நின்று
நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்
நானிலம் புகழ்ந்திடக் கண்டவளாம்

தீர்க்க சுமங்கலி வாழ்கவே அந்த
திருமகள் குங்குமம் வாழ்கவே
காக்கும் தேவதை வாழ்கவே அவள்
காவலில் நல்லரம் வாழ்கவே
காவலில் நல்லரம் வாழ்கவே


1 கருத்து:

ஸ்ரீஸ்ரீ சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

கருத்துரையிடுக