பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 அக்டோபர், 2011

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும் பாலுடன் தேன் கனி சேர வேண்டும்


மென்மையான மேல் நாட்டு இசையுடன் எளிமையான பாடல் வரிகளில் இனிமையானப் பாடல். நம் கால்களையும் தாளமிட செய்கிறது.

திரைப் படம்: கண்ணன் என் காதலன் (1968)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்:P  நீலகண்டன்
நடிப்பு: எம் ஜி ஆர், ஜெயலலிதா
குரல்: T M S
பாடல்: ஆலங்குடி சோமு



http://www.divshare.com/download/15993277-d7e








பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
ம் பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால்
ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால்
கால்கள் தாளம் இடும்
பாட்டில் சுவை இருந்தால்
ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால்
கால்கள் தாளம் இடும்

தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது படுமை
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது படுமை
நூலளந்த இடைதான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

பாதம் சிவந்திருக்கும்
பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும்
புருவம் மூன்றம் பிறை
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்பேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆட தோன்றும்

1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

எம்.ஜி.ஆர் பாடல்கள் எப்போதுமே மனம் மயக்க வல்லவை. இந்தப் பாடல் இன்னும் ஸ்பெஷல். இன்றும் இனிக்கும் பாடல்!

கருத்துரையிடுக