இனிமையான பாடல்.
திரைப் படம்: முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)
குரல்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா
இசை: இளையராஜா
இயக்கம்: A. ஜகன்னாதன்
பாடல்: கங்கை அமரன்
நடிப்பு: விஜயகுமார், சுமித்ரா
http://www.divshare.com/download/16225408-59f
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அழைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
பொங்கி வரும் அலை பூச்சரம் போட
பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில்
மன்மதன் தேர் வந்தது
மலர் கணைகள் விழி வழியே
மது மயக்கம் மொழி வழியே
மாற்றம் இங்கே தோற்றம்.. வா இப்போது
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
வாழ்ந்திருந்தால் தினம் நான் உன்னோடு
வாழ்வினைப் பார்த்திருப்பேன்
வாழ்க்கை எல்லாம் சுகம் வளர்வது போலே
நான் உனை சேர்ந்திருப்பேன்
கனவுகளே நினைவில் வரும்
நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா இன்றும் என்றும்.... நான் உன்னோடு
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
காலமெல்லாம் உந்தன் காலடி தேடி
காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உனைக் காண்பது போலே
கனவினில் நான் மிதந்தேன்
உறவிருந்தால் தனிமை இல்லை
தனித்திருந்தால் இனிமை இல்லை
இனிமேல் பிரிவே இல்லை.. நாம் ஒன்றானோம்
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
அன்பே ஒரு முறை அழைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன்
நீ வரும் வரை
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர் பிறை
2 கருத்துகள்:
கேட்டதே இல்லை. அமைதியான இனிமையான மெட்டு.
மலேசியா வாசுதேவனின் காதல் பாடல்கள் அனைத்தும் தேனமுது. அதில் ஒரு பாடல் தான் இந்த அழகு பாடல்.
கருத்துரையிடுக