இசையமைத்தவர் கீரவாணி அல்லது மரகத மணி யாரென்று சரியாகத் தெரியவில்லை.இன்றைய காலகட்டத்திற்க்கு உதவாத நல்ல கருத்துக்கள் கொண்ட ஒரு அழகு பாடல்.
திரைப் படம்: அழகன் (1991)
நடிப்பு: பானு பிரியா, கீதா, மதுபாலா, மம்மூட்டி
இசை: கீரவாணி
இயக்கம்: K பாலசந்தர்
பாடல்: வாலி
குரல்: S P B
http://www.divshare.com/download/16552309-c86
http://www.divshare.com/download/16552447-124
சாதி மல்லிப் பூச்சரமே
சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன்மனம் இருக்கக்கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப் போல் எல்லோரும் என
இல்லோரும் அதில் இன்பத்தை தேடனும்
சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத நினைச்சி நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு
சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையினா ஆசையடி அவ்வளவு ஆசையடி
1 கருத்து:
Music Director ; Maragathamani
கருத்துரையிடுக