பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இளம் தென்றலோ கொடி முல்லையோ

அதிகம் அறிமுகம் இல்லாத படம். பாடல் இனிமை. (எங்கே  காப்பியடிச்சாரோ?) ஆர்ப்பாட்டம் இல்லாத இசையில் இரு குரல்களும் தேவ கானம் பொழிந்துள்ளன.

திரைப் படம்: வசந்த மலர்கள் (1992)
இசை: தேவா
குரல்கள்: S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
பாடல்: வாலி
இயக்கம்: A R ரமேஷ்
நடிப்பு: ஹரிராஜ் (யார்?), ரேகா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDY5NTc4MF9WZU1EeV83ZGZk/IlamThendralo%20Kodi.mp3



இளம் தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்
மெல்ல தீண்டினால் என்ன ஆகும்
முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

இளம் தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பனி வாடை கதவிடிக்க வாழை மடல் திறக்க
காதல் புரியும் இயற்கை

இந்த வேளை மனதிலொரு மோகம் பிறந்து வர
தோளைத் தழுவும் வளை கை

இதில் நாணம் கூடாது பொதுவா

இந்த வேகம் ஆகாது தலைவா

வரவும் செலவும் இனிமேல் நித்தம் நித்தம்

இளம் தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ

மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்

மெல்ல தீண்டினால் என்ன ஆகும்

முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

இளம் தென்றலோ கொடி மின்னலோ

இவள் மங்கையோ இன்ப கங்கையோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பசும் பாலும் பழ ரசமும் பாவை உதடுகளில்
நாளும் சுரக்கும் அல்லவோ

அதில் மீதம் எதுவும் இன்றி போதும் வரையில் இன்று
நானும் எடுத்துக் கொள்ளவோ

இதழ் காயம் ஆகாதோ அரும்பு

அது காதல் போராட்ட  தழும்பு

பனிவாய் மலர் நான் தொடு நீ மெல்ல மெல்ல

இளம் தென்றலோ கொடி மின்னலோ

இவள் மங்கையோ இன்ப கங்கையோ

மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்

மெல்ல தீண்டினால் என்ன ஆகும்

முன்னும் பின்னும் மின்னும் இடை ஊஞ்சலாடும்

இளம் தென்றலோ கொடி மின்னலோ

ஆ  ஆ ஆ ஆ ஆ

இவள் மங்கையோ இன்ப கங்கையோ
 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்.... வரிகள் அருமை... நன்றி சார்...

கருத்துரையிடுக