பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2011

யாரிது தேவதை ஓராயிரம் பூ மழை

நண்பர்களுக்கு,

இணைய இணைப்புக்கு முற்படாத இடத்திற்க்கு விடுமுறைக்கு செல்வதால் 2 அல்லது 3 நாட்கள் கழித்து மீண்டும் சந்திப்போம்.
 
வெளிவராமல் போன ஒரு படத்திலிருந்து கங்கை அமரன் இசையில் SPBயின் குரலில் ஒரு அருமையான பாடல்.


திரைப் படம்: என் ப்ரியமே (1983)
பாடல்: ந.காமராசன்
இயக்கம்: சிவகுமார்
நடிப்பு: வெளிவராத படத்தில் யார் நடித்திருந்தால் என்ன? சாரி...தெரியவில்லைhttp://www.divshare.com/download/15209772-aa9

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

சுகம் தரும் நிலா
வரும் திரு விழா
இதோ என் காதல் தேசம் இங்கே

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை


நி ச நி ச நி ச நி ச நி ச நி ச க ரி ச
நி ச நி ச நி ச நி ச நி ச நி ச ப ம க
க ம க த த த ம த ம த த த
நி நி நி ச நி நி நி ச சரி ரி ரி ரி ரி


காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
ஹோய்..
ஆ ஆ...
காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ
என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
பொன் வீணையே
புது பாடகன் தொடும் நேரமோ?
கண்மணியே என் உயிரே
பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட


யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ

ஆ ஆ ஆ...

மேகங்கள் பூ தூவும் செவ்வானம் நீ
தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ

இதழ் ஒசைகள்
புது ஆசைகள்
பரிபாஷைகள்
ஆ ஆ ஆ ஆ
பூ முகமோ
பால் நிலவோ
பார்த்ததும் பூத்திடும்
யாத்திரை இரவினில்


யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

சுகம் தரும் நிலா
வரும் திரு விழா
இதோ என் காதல் தேசம் இங்கே

யாரிது தேவதை
ஓராயிரம் பூ மழை

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

என் மனங் கவர்ந்த பாடல்.

கருத்துரையிடுக