பின்பற்றுபவர்கள்

புதன், 20 ஜூலை, 2011

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை

புதுக் குரல் தேடலில் மகாராஜன் அருமையாக பாடி இருக்கும் ஒரு பாடல். அருமையான பாடல் வரிகள்.


திரைப்படம்: ஒரு வீடு ஒரு உலகம் (1978)
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: K S சசிரேகா, T L மகராஜன்
பாடலாசிரியர்: புலமைபித்தன்
இயக்கம்: துரை
நடிப்பு: ஷோபா, விஜயபாபுhttp://www.divshare.com/download/13571932-ada


ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை

ரதி மாறன் மந்திரமோ விழிகளின் பாஷை
நாள்தொரும் ஓதுவதில் எத்தனை ஆசை
நாள்தோரும் ஓதுவதில் எத்தனை ஆசை

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை...

ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும்
கோலம் கொண்டதென்ன...

தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு...
மயங்கி நின்றதென்ன சொல்ல...

திருமண மேடையில் நாதஸ்வரம்...

இருமன மேடையில் நாளும் சுகம்...

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை...

நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென
பாடிடும் தென்றல் காற்று...

என் காதல் தேவி...பல்லாண்டு வாழி...
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு
இதுவும் தென்றல் சொன்ன பாட்டு

இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே...

இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே...

ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை
இதழ்மணி ஓசை...

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

அருமையான பாடல். புலவர் புலமைப்பித்தன் அருமையாக எழுதி உள்ளார்.

பெயரில்லா சொன்னது…

B.S.சசிரேகா-பாடகியின் பெயர்.

Raashid Ahamed சொன்னது…

இது ஒரு கிடைப்பதற்கரிய பாடல் வெளியிட்டமைக்கு நன்றி. திருச்சி லோகநாதனின் புதல்வர் பாடிய ஒரு இனிய பாடல்.

கருத்துரையிடுக