பின்பற்றுபவர்கள்

புதன், 6 ஜூலை, 2011

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்

இந்தப் பாடலை பாடும் குரல்களின் இனிமையே தனிதான். இசையமைப்பாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். இன்னுமொரு அரிய பாடல்.
சாந்தி கிருஷ்ணா!!! தனது அமைதியான நாகரீகமான நடிப்பால் அப்போதைய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கிருஷ்ணா என்ற இயக்குனரை (நடிகர்?) காதலித்து மணந்துக் கொண்டார். அவரது காதல் கணவர் தற்கொலை செய்துக் கொண்டு இறந்து போனார் என்றுக் கேள்வி பட்டேன். செய்தி சரியோ தவறோ தெரியவில்லை.

திரைப் படம்: சிவப்பு மல்லி (1981)
பாடல்: வைரமுத்து
குரல்கள்: K J Y, P சுசீலா
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: ராம நாராயணன்
நடிப்பு: சந்திரசேகர், சாந்தி கிருஷ்ணாhttp://www.divshare.com/download/15246816-323

தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந
தன ந ந ந தன ந ந ந

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்

எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசி கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
உள்ளங்கை சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடி கொண்டால் அது கொஞ்சம் ஆறும்

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தானனா தானனா நா
தானனா தானனா நா
தானனா தானனா நா
தானனா தானனா நா

இளம்பிரையே இளம்பிரையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
இளம்பிரையே இளம்பிரையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவை தொடாதே..
தொடாதே.. தொடாதே..

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்

தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம்
தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்
தன ந ந தன ந ந தன ந ந
தன ந ந தன ந ந தன ந ந

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

அருமையான பாடல். நடிகை சாந்தி கிருஷ்ணா குறித்த சில தகவல்கள். சாந்தி கிருஷ்ணா, ரயில் பயணங்களில் ஸ்ரீநாத்தை காதல் மணம் புரிந்தார். பிறகு விவாகரத்தானது. ஸ்ரீநாத் தான் தற்கொலை செய்து கொண்டார். பிரபல பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா - சாந்தி கிருஷ்ணாவின் சகோதரர்.

கிணற்றுத் தவளை சொன்னது…

தவறுதலுக்கு மன்னிக்கவும். ஸ்ரீநாத் என்பதை தான் தவறாக கிருஷ்ணா என்று எழுதிவிட்டேன். தமிழ் உதயன் அவர்களுக்கு நன்றி. ஒரு நல்ல அழகான நடிகைக்கு எற்பட்ட இந்த நிலைமைக்கு வருந்துகிறேன்.

கிணற்றுத் தவளை சொன்னது…

மீண்டும் தவறுதலுக்கு மன்னிக்கவும். தமிழ் உதயம் என்பது தமிழ் உதயன் என்று டைப் ஆனதற்கு.

கருத்துரையிடுக