பின்பற்றுபவர்கள்

சனி, 30 ஜூலை, 2011

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இசையிலும் குரல்களிலும் என்ன மென்மை? அழகான பாடல்.

இங்கே நான் தந்திருக்கும் விபரங்கள் தவறாகவும் இருக்கலாம்.
திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
குரல்கள்: S P B, ஆஷா போன்சிலே

நடிப்பு: விஜயன்
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1NzA5MV9LR0JlS19mOGE5/unnai%20naan%20paarkaiyil.mp3

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

ஆவாரம் பூவுக்கு மேலாடை ஏன் இங்கே
ஆடைக்கும் மேலாடை நீ கொண்டு வா இங்கே
உன் கூந்தலில் பார்க்கிறேன் தொங்கும் தோட்டங்கள்
பொன் மாலையில் மல்லிகை பூவைச் சூட்டுங்கள்
என் மார்பிலே ஆடும் பொன் ஆரமே
செந்தூரமே உன்கள் கண்ணோரமே
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே
மை வைத்த கண்ணோரம் பொய் வைக்கக் கூடாது
மாதங்கமோ தங்கம் கை வைக்கக் கூடாது
நீ பார்த்திடும் பார்வையில் முள்ளும் பூ பூக்கும்
நீ பேசிடும் சொல்லிலே கள்ளும் தேனூறும்
பிருந்தாவனம் எங்கே போகின்றது
என் கன்னமே தேடி போகின்றது
நீ கண்ணனா என் உயிர் கள்வனா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

லா லா லா லா லா லா லலலல லா லா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக