பின்பற்றுபவர்கள்

வியாழன், 21 ஜூலை, 2011

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா...

எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் இது. நண்பர்களுக்கும் பிடிக்கும் என் நினைக்கிறேன். இதை பாடிய பெண் குரல் சரோஜினிக்கு இதுதான் முதலும் கடைசியுமான பாடல் என் நினைக்கிறேன். என்ன இனிமையான  மென்மையான குரல்!! படத்தின் பெயர் கூட சரிதானா என்பது தெரியாது. இசை K V மகாதேவன் என்பதாக நினைவு. மிக மிக இனிமையாக இசையும், குரலும் கவிதையும் கலந்து வழங்கி இருக்கிறார்கள்.

திரைப் படம்: அவளா இவள்

குரல்கள்: S P B, சரோஜினி

இப்படத்தினை பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை

Upload Music - Play Audio -

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூந்துகில் ஒரு பாதி பூங்குழல் ஒரு பாதி மூடிய திரு மேணி முக்கனி கொண்டாடும்...

மூவகை கனி தேடி மன்னவன் வரும் போது நால்வகை குணம் வந்து நெஞ்சினில் நின்றாடும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

பூமழை தூவிய பஞ்சனை மேவிய பைங்கிளி போல் உன்னை அள்ள வேண்டும்....

மாலை மயங்கிய வேளை தொடங்கிட மந்திரம் யாவையும் சொல்ல வேண்டும்...

இன்னும் இன்னும் சொல்ல சொல்ல என்னென்னவோ எண்ணம் கொண்டு சொல்லு சொல்லு என்று என்னை கெஞ்ச வேண்டும்...

அந்த சுகம் என்னவென்று போக போக கொண்டு வந்து அள்ளி அள்ளித் தந்த பின்பு என்ன வேண்டும்...

நீ ஒரு கடலாட்டம்.. நான் ஒரு படகாட்டம்...நீந்திடும் மனம் உண்டு நித்தமும் வெள்ளோட்டம்...

நித்தமும் இது போலே முத்திரை பதித்தாலே சித்திரை கொடியாளின் நித்திரை என்னாகும்...

இந்த நிலவுக்கு வயதென்ன பதினறா... இது கால்கொண்டு நடக்கின்ற பாலாறா...

உந்தன் கண்ணுக்கு நான் என்ன வெண்ணிலவா... என்னை கட்டிக்கொள்ள இது என்ன நள்ளிரவா...

2 கருத்துகள்:

suji சொன்னது…

ஒரு இனிய பாடலை எடுத்துத் தந்தமைக்கு நன்றி.

Covai Ravee சொன்னது…

Intha aadalai myspb.blogspot.com thodarpukoduthullen. nandrikal pala

கருத்துரையிடுக