பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 26 ஜூலை, 2011

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே பூமியில் வந்தது

எந்த ராகத்திலும் அடங்காத ஒரு வித்தியாசமான ஆனால் இனிமையான பாடல். M S விஸ்வனாதனின் இசையின் சாயல் தெரிகிறது.


திரைப்படம்: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே (1980)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: பாக்யராஜ், ராதிகா
இயக்கம்: ரா சங்கரன்
Music File Hosting - Podcast Hosting -
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு

கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
கையில் மயங்கும் மல்லிகை செண்டு

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு

அணைக்கையில் மணக்கின்ற அமுதெனும் உன் மேனி
அழகினை கண்களால் அளந்திடவா
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
இதழ்களில் இதழ் கொண்டு இனிய கதை ஒன்று
எழுதிட சம்மதம் தருவாயா.. தருவாயா..

மணவறை மாலைகள் சூடிய பின்னாலே
மலர் மகள் என்னை நீ தொட வரலாம்
உனக்கென்று சிவந்துள்ள பழுத்த பலா என்னை
பறித்திட வேகமா அவசரமா.. அவசரமா

தனிமையில் இருக்கையில் தாமதம் செய்யாதே
என்னிடம் வெட்கமேன் இளம்குயிலே
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சிரிக்கின்ற மலர்க்கொடி பெண்கள் எல்லோருக்கும்
சீதனம் வெட்கம்தான் தெரியாதா..தெரியாதா..

பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நான்
கையில் மயங்கும் மல்லிகை செண்டு
உன் கையில் மயங்கும் மல்லிகை செண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக