பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஜூலை, 2011

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்..Alai meethu thadumaruthe...

S P B குரலை சற்று மாற்றிப் பாடியிருக்கிறார். S P Bயும் வாணியும் பாடலில் சோகத்தை இழைத்து அருமையாக பாடியிருக்கிறார்கள். ஒரு அபூர்வ பாடல்.


திரைப் படம்: அன்புள்ள மலரே (1984)
குரல்கள்: S P B , வாணி ஜெயராம்
இசை: இளையராஜா
நடிப்பு: சரத்பாபு, ஸ்ரீவித்யா
இயக்கம்: B R ரவிஷங்கர்
http://www.divshare.com/download/15328920-581


அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை

ஏதோ கொஞ்சம் இனிமை

பெண்ணை பெண்ணாய் காணும் காலம் இல்லை

போதும் போதும் தனிமை

பிள்ளை என்னும் கொடி முல்லை கண் வளர

இல்லை இல்லை கவலை

ஆஆ ஆஆ

இந்த நேசம் சுகம் ஆகுமே

இவள் வாழ்க்கை நிறம் மாறுமே

என்றாலும் கண்ணொரம் ஓர் சோகமேஅலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே

ஏதோ சொல்லி சிரிக்கும்

தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே

சாகும் முன்பே எரிக்கும்

தானாய் ஏணி தரும் மேலே ஏற விடும்

மீண்டும் ஏணி பறிக்கும்

ஆஆ ஆஆ

தடுமாறும் இங்கு நியாயங்கள்

இதனால்தான் பல காயங்கள்

கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

சுமை தாங்காமலே கரை தேடும்

சென்று சேரும் வரை இவள் பாவம் பாவம்

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடல்.

கருத்துரையிடுக