பின்பற்றுபவர்கள்

சனி, 16 ஜூலை, 2011

ஆலயம் நாயகன்..கோபுரம் நாயகி..

மற்றுமொரு ஆர்ப்பாட்ட இசை இல்லாத இனிமையான பாடல் V குமார் இசையில். இது முழுமையாக இலங்கையில் படமாக்கப் பட்டது.


திரைப் படம்: நங்கூரம் (1979)
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி, விஜய குமரதுங்க (முன்னால் இலங்கை அதிபர் சந்திரிகாவின் கணவர்)
இசை: V குமார் + கேமதாசா (இலங்கை)
பாடல்: கண்ணதாசன்http://www.divshare.com/download/14237840-10eஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி

அமைதியான தீபம் ஒன்று
அழகு பொங்கும் மோகனம்
அமைதியான தீபம் ஒன்று
அழகு பொங்கும் மோகனம்
ஆதிகால பெண்மை
இது நீதி காக்கும் என்னை
நேரில் வந்த சொர்க்கம்
அதன் வாசல் தானே வெட்கம்

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி

இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்
இறைவன் பார்த்து தந்த இன்பம்
இணை இல்லாத காவியம்
ஏழு லோகம் எங்கும்
இந்த தேவி போல இல்லை
ஏழை தோட்ட ரோஜா
அதை காவல் காக்கும் ராஜா

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை
அன்பினாலே பூஜை செய்வாள்
வாழ வந்த தேவதை

ஆலயம் நாயகன்
கோபுரம் நாயகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக