S P Bயின் இன்னுமொரு அருமையான பாடல் G K வெங்கடேஷ் இசையில்.
திரைப் படம்: மல்லிகை மோகினி
இசை: G K வெங்கடேஷ்
பாடியவர்: S P B
பாடலாசிரியர்: கண்ணதாசன் நடிப்பு: (பம்பாய்) விக்ரம், லதா
இயக்கம்: துரை
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
எந்தன் பாதையில் இந்த தேவதை குரலோசை கேட்கிறேன்
உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் வானில் பறக்கிறேன்
விழி மோகனம் தரும் மந்திரம்
விழி மோகனம் தரும் மந்திரம்
அது மோக காவியம்
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
பனி மல்லிகை மண மோகினி உனை மறக்க முடியுமோ
ஓராயிரம் கவி பாடினும் இதை ஈடு செய்யுமோ
ஏழுலகமும் சென்று தேடினும்
ஏழுலகமும் சென்று தேடினும்
இதை காணக் கூடுமோ
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
மழை காலங்கள் வரும் வேளையில் உன்னை மேகம் ஆக்குவேன்
இளம் கோடையில் எந்தன் ஜாடையில் உன்னை தென்றல் ஆக்குவேன்
என் நெஞ்சமே ஒரு ஆலயம்
என் நெஞ்சமே ஒரு ஆலயம்
உன்னை தெய்வம் ஆக்குவேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உன்னை தேடினேன் இன்று நேரில் காண்கிறேன்
ஒரு பாடலை பல ராகத்தில் உனை பார்த்துப் பாடினேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக