பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 ஜூலை, 2011

மலரும் கொடியும் பெண்ணென்பார்...

கொஞ்சும் திருமதி P சுசீலா அம்மாவின் குரல் சொல்லும் இந்தப் பாடலின் தரத்தை. அந்தக் காலத்தில் காதல் வயப் பட்டவர்களுக்கு தெரியும் இந்தப் பாடலின் அருமை. காதல் குறைகளை பார்க்காது என்பது. இன்றும் மன அமைதிக்கு ஏற்ற பாடல் இது.


திரைப் படம்: எல்லாம் உனக்காக (1961)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி
இயக்கம்: A சுப்பாராவ்
குரல்கள்: T M S, P சுசீலா


மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

மலரும் கொடியும் நடப்பதில்லை

அவை மணம் தர என்றும் மறப்பதில்லை

மலரும் கொடியும் நடப்பதில்லை

அவை மணம் தர என்றும் மறப்பதில்லை

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

கோவிலில் விளங்கும் சிலை போலே

என் குலத்தில் விளங்கும் திருமகளே

கோவிலில் விளங்கும் சிலை போலே

என் குலத்தில் விளங்கும் திருமகளே

கோவிலின் சிலைகள் நடப்பதில்லை

கோவிலின் சிலைகள் நடப்பதில்லை

அதை குறையென கலைகள் வெறுப்பதில்லை

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

தேன் மணம் தவழும் பூ மகளே

என் சிந்தையில் மலர்ந்த தாமரையே

தேன் மணம் தவழும் பூ மகளே

என் சிந்தையில் மலர்ந்த தாமரையே

தாமரை மலரும் நடப்பதில்லை

தாமரை மலரும் நடப்பதில்லை

அதை தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை

நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டோம்

நினைவினில் குறைகள் வருவதில்லை

நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்து விட்டோம்

நினைவினில் குறைகள் வருவதில்லை

கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்

இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை

கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்

இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை

மலரும் கொடியும் பெண்ணென்பார்

மதியும் நதியும் பெண்ணென்பார்

1 கருத்து:

Dwarakaivasan Sarangapani சொன்னது…

காதலியின் குறையை பெரிதுபடத்தாமல் அவளை சமாதானம் செய்யும் அருமையான பாடல்
நன்றி
சா.துவாரகை வாசன் sarangapanidwarakaivasan0@gmail.com

கருத்துரையிடுக