இன்றைக்கும் கேட்டால் மனம் நெகிழச் செய்யும் பாடல். பாடலின் ஒவ்வொரு வரியும் அர்த்தமுள்ளது. குழந்தை இல்லை என்னும் உணர்வை மிகப் பிரமாதமாக பாடலாக வடித்தெடுத்திருக்கிறார்கள்.
திரைப் படம்: நீலவானம் (1965)
பாடியவர்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, தேவிகா
வசனம்: K பாலசந்தர்
இயக்கம்: P மாதவன்
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
சொல்ல சொல்ல தாய் மனம்
மெல்ல மெல்ல போய் வரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
மலர் இல்லாத தோட்டமா
கனி இல்லாத வாழையா
மகன் இல்லாத அன்னையா
மகனே நீ இல்லையா
வண்ண வண்ண வான் முகம்
எண்ண எண்ண தேன் தரும்
வண்ண வண்ண வான் முகம்
எண்ண எண்ண தேன் தரும்
தெய்வமே தாயிடம்
தேர் ஏறி ஓடி வரும்
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
நினைவில் வந்த நிம்மதி
நேரில் வந்ததில்லையா
மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
மனதில் மட்டும் அன்னையா
மகனே நீ இல்லையா
இல்லை இல்லை நீ என
எண்ண எண்ண வேதனை
இல்லை இல்லை நீ என
எண்ண எண்ண வேதனை
அன்னையின் வாழ்வும் நீ
இல்லாமல் போய் விடுமோ
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக