மென்மையான இசையுடன் கூடிய பாடல்.
திரைப் படம்: இன்னிசை மழை (1991)
இசை: இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
இயக்கம்:ஷோபா சந்திரசேகர்நடிப்பு: நிராஜ், பர்வீன்
பாடல்: வைரமுத்து
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம் சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம் சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
பத்து விரல் பட்டால் என்ன முத்த மழை இட்டால் என்ன
ஆகா..ஆகா..ஆகா பொன்னே மணியே
பட்டு உடல் சுட்டால் என்ன வெட்கம் அதை விட்டால் என்ன
ஆகா..ஆகா..ஆகா அன்பே அமுதே
கங்கை நதி நீராட கண்ணன் வரத்தான்
மங்கை மடி சீராட மன்னன் வரத்தான்
ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும் கூடி வரும் நாளிது
நேற்றிரவு..அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம் சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம் சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
அந்தப்புர சந்தோசங்கள் அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆகா ஓகோ ஹே ஹே உன்னால் வந்ததே
தென்பொதிகை சாரல் என சின்னமணி தூரல் என
ம் ம்...ஆகா..ஓகோ இன்பம் தந்ததே
முன்பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
முற்றுப்புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
இனி முதுமை வரையில் நமது உறவு ஓடி வரக் கூடுமே
அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோதித்தித்தது நெஞ்சம்
சம் சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம் சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லி தந்தேனே சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன ஹா ஹா ஹா ஹா ஹா
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய் நீ மறந்தாயோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக