நல்ல இனிமையான காதல் கீதம்.
திரைப் படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்: S P B, வாணி ஜெயராம்
பாடல்: வாலி
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், லதா
Upload Music - Play Audio -
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில்
லீலை புரியும் ஆசை பிறக்காதோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என் மனம் வாடியதென்ன
மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு
மேனி மீது எழுதும் மடல் தான் உறவு
தலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்
அதுவரையில் நா……..ன்.. அதுவரையில் நான்
அனலில் மெழுகோ
அலைக் கடலில் தான் அலையும் படகோ
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன
பூவிதழ் தேடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்
வேளை பிறக்காதோ அந்த வேளை வரையில்
காளை உனது உள்ளம் பொறுக்காதோ
காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க
கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க.
இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே
பிறர் அறியாமல் ல் ல் ல் பிறர் அறியாமல்
பழகும் போது
பயம் அறியாத இதயம் ஏது
வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்
ராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்
உனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்
சுதி விலகாமல் இணையும் நேரம்
சுவைக் குறையாமல் இருக்கும் கீதம்
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை
உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன
பூவிதழ் மூடியதென்ன
என்னிடம் நாடியதென்ன
ஒரு மாலையிடவும் சேலை தொடவும்
வேளை பிறந்தாலும்
அந்த வேளை வரையில்
காளை உனது உள்ளம் பொறுக்காதோ
1 கருத்து:
சரியாக கெளரவிக்கப்படாத ஒரு மாபெரும் கவிஞர் தான் வாலி. கண்ணதாசன் எழுதியதாக நாம் நினைத்து கொண்டிருக்கும் நிறைய பாடல் வாலி எழுதியது தான். உதா: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ !
கருத்துரையிடுக