மென்மையான பின்னனி இசையும், அளவான கவிதையும், புரிந்து உணர்ந்து பாடிய குரல்களும் பாடலுக்கு சிறப்பு. இன்று இரண்டு பாடல்களில்
T M S உம் திருமதி P சுசீலா அம்மாவும் இணைந்து பாடியதும் அடுத்து சுசீலா அம்மா தனித்து சோகமாக பாடியதும் இடம் பெற்றுள்ளது. இரண்டுமே அருமையாக கையாளப்பட்டிருக்கிறது. இணைக் குரல்கள் பாடிய பாடல் நீண்ட தேடுதலுக்குப் பின் எனக்கு கிடைத்தது. நான் இந்தப் பாடலைக் கேட்டே 20/25 வருடங்கள் ஆகியிருக்கலாம் என நினைக்கிறேன். என்றும் அழியாத பாடல்கள். அபூர்வமாகி போனது இன்று.
திரைப் படம்: எங்க வீட்டு பெண் (1965)
பாடல்: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
நடிப்பு : A V M ராஜன், விஜய நிர்மலா
இயக்கம்: B நாகி ரெட்டி
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
நானம் என்பது நாடகமா
அதில் மௌனம் என்பது சம்மதமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
பூவிருக்கும் கூந்தலிலே நான் இருந்தால் ஆகாதா
பால் மணக்கும் பெண்ணழகை பார்த்திருந்தால் போதாதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
இன்னொரு நாள் தருவதெல்லாம் இன்று தந்தால் ஆகாதா
அன்று வரை பொறுத்திருந்தால் அந்த மனம் கேளாதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஒருவருமே பார்க்காமல் ஒன்று தந்தால் ஆகாதா
தனிமையிலே தவறு செய்தால் தன் மனமே பார்க்காதா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
ஆசை என்பது நாடகமா
அதில் ஆண்மை என்பது அவசரமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
சோகத்தையும் அழகாக இசைத்திருக்கிறார் திருமதி சுசீலா அவர்கள். மனதை வருடும் சோகம்.
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்காதல் என்பது நாடகமா - அதில்
கண்ணீர் என்பது காவியமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
சாலையிலே விதி வழியே சந்தித்தாள் ஒரு வழியே
சாலையிலே விதி வழியே சந்தித்தாள் ஒரு வழியே
தனிவழியே அவனை விட்டு தன் வழியே போகாதே
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
எங்கே நீ போனாலும் அவன் முகமே தோன்றாதோ
எங்கே நீ போனாலும் அவன் முகமே தோன்றாதோ
எவ்விடம் நீ சென்றாலும் அவன் குரலே கேளாதோ
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
இவன் மனைவி இவளெனவே எழுதிவிட்டான் இறைவனடி
இவன் மனைவி இவளெனவே எழுதிவிட்டான் இறைவனடி
அவன் எழுதும் ஒவியத்தை அழித்தவர்கள் இல்லையடி
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
காதல் என்பது நாடகமா - அதில்
கண்ணீர் என்பது காவியமா
கால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள்
1 கருத்து:
அபூர்வமாகிப்போன பாடலைத் தேடி எடுத்து பதிவேற்றியமைக்கு நன்றி...
கருத்துரையிடுக