பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட

இசை தந்த குயிலாக, குயில் தந்த குரலாக திருமதி P சுசீலா அவர்கள் P B ஸ்ரீனிவாஸுடன் பாடும் இனிமைப் பாடல்.
திரைப்படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
பாடல் வரிகள்: வாலி









மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

குழல் தந்த இசையாக... இசை தந்த குயிலாக... குயில் தந்த குரலாக நான் பாடுவேன்...

கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...



உறவென்னும் விளக்காக உயிர் என்னும் சுடராக...ஒளிவீசும் உனக்காக நான் வாழுவேன்...

விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...

கை விரல் கொஞ்ஜும் யாழாக.. யாழ் கொஞ்ஜும் இசையாக..இசை கொஞ்ஜும் மனமாக நான் மாறுவேன்...



இளங்காதல் வயதாலே தனியாகினேன்..அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்....



இமை மூடி தூங்காமல் போராடினேன்...உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்...



கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...



கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்... உன் மடிமீது தலை சாய்த்து இளைபாறினேன்...



அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்..அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்...



கண் மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்...

2 கருத்துகள்:

கருத்துரையிடுக