பின்பற்றுபவர்கள்

சனி, 27 ஆகஸ்ட், 2011

மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கிப் போனேன்


இது ஒரு வெளிவராத திரைப்பட பாடல். வழக்கமான பாடல்தான் என்றாலும் பாடலின் மென்மையும் குரல்களின் இனிமையும் மனதை சுண்டி இழுக்கிறது.

திரைப் படம்: புதிய அடிமைகள் (1980 என்று நினைக்கிறேன்)
இசை: இளையராஜா
குரல்கள்: K J Y, P சுசீலா
பாடல்: கங்கை அமரன்









மகிழம் பூவே
உன்னை பார்த்தேன்
மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்
நினைத்து பார்த்தேன்
நெஞ்சம் ஏங்கி
உருகி போனேன்

மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்

ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே
ஓடை நீரில் மீன் போலே
ஓடும் புள்ளி மான் போலே

உள்ளம் உன் மேலே பாய்ந்து தாவும் தன்னாலே

தென்றலை போல் என்னுடலை தீண்ட கூடாதோ
காவல் தாண்ட கூடாதோ

மோகம் கொண்ட மேகம் போல
நீயும் வந்தால் ஆகாதோ

மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்

பொன்னை போல உன் மேனி
பூவை நீயே என் ராணி
பொன்னை போல உன் மேனி
பூவை நீயே என் ராணி

ஆசை ராஜாவே நாளும் வாச ரோஜாவே

வாழ்க்கையென்னும் பாதையிலே சேர்ந்து போவோமே
நாமும் வாழ்ந்து பார்ப்போமே
யாரும் காணா சொர்க்கம் தன்னை நாமும் இங்கே காண்போமே

மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கிப் போனேன்
நினைத்துப் பார்த்தேன் நெஞ்சம் ஏங்கி
உருகிப் போனேன்
மகிழம் பூவே உன்னைப் பார்த்தேன்
மயங்கிப் போனேன்

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மகிழம் பூவே உன்னை பார்த்தேன்
மயங்கி போனேன்/

அழகான வரிகள்.

கருத்துரையிடுக