பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 டிசம்பர், 2011

எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே


இந்தப் பாடலை தேவா அவர்களின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் எனலாம். இனிமை.

திரைப் படம்: உன்னருகில் நான் இருந்தால் (1999)
பாடுவோர் : கிருஷ்ணராஜ், சித்ரா
பாடல் : தாமரை
இசை : தேவா
இயக்கம்: செல்வா
நடிப்பு: பார்த்திபன், மீனா
http://www.divshare.com/download/16268109-a01
http://www.divshare.com/download/16268200-371

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே

உன்னருகில் நான் இருந்தால் தினம்
உன்னருகில் நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை
என்ற எண்ணத்தில் நான் இருந்தேன்
இன்று உன்னை பார்த்தவுடன்
என்னை தோற்று விட்டு வெட்கத்தில்
தலை குனிந்தேன்
அன்பே ஓர் நிமிடம் உன்னை
மறந்திருக்க என்னாலே
முடியவில்லை
இங்கு எந்தன் நாள் முழுக்க உன்னை நினைத்திருக்க
ஒருப்போதும் அலுக்கவில்லை
சின்ன சின்ன கூத்து நீ செய்யரதை பாத்து
உள்ளுக்குள்ளே நான் சிரித்தேன்
வண்ண வண்ண பாதம் நீ வச்சி வச்சி போகும்
அந்த தரையாய் நான் இருப்பேன்
கவலைகள் மறக்கவே கவிதைகள் பிறக்கவே

உன்னருகில் நான் இருந்தால் தினம்
உன்னருகில் நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே

உன்னருகில் நான் இருந்தால் தினம்
உன்னருகில் நான் இருந்தால்

உன்னை சேர்வதற்கு யுத்தம் செய்யவில்லை
ஆனாலும் நீ கிடைத்தாய்
எங்கெங்கோ சுற்றி வந்த என்னை நிற்க வைத்து
அடையாளம் நீ கொடுத்தாய்
உன்னை சேரும் அந்த நாளை எண்ணி எண்ணி
பத்து விரல் நான் மடிப்பேன்
புது மஞ்சள் தாலி மின்ன
மெட்டி கேலி பண்ண பக்கத்தில் நான் கிடப்பேன்
கண்ணில் மீனை வச்சி புத்தம் புது தூண்டில்
போட்டது நீயல்லவா
கள்ளத்தனம் இல்லா உன் வெள்ளை உள்ளம் கண்டு
விழுந்தது நான் அல்லவா
உலகமே காலடியில் கடந்ததே ஓர் நொடியில்

உன்னருகில் நான் இருந்தால் தினம்
உன்னருகில் நான் இருந்தால்

எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே
சொல்லாமல் என்னை எடுத்தாய்
பதிலாக உன்னை கொடுத்தாய்
உலகத்தின் பூக்களே
உயிரிலே பூத்ததே

உன்னருகில் நான் இருந்தால் தினம்
உன்னருகில் நான் இருந்தால்
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக