பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும் ஆனந்த கீதம் ஆரம்பமாகும்


இனிமையான பாடல், இளம் ஜோடிகளுடன். அருமையான பின்னனி இசை. K J யேஸுதாஸ் அவர்களின் சோக கீதத்தில் பாடல் வரிகளில் எந்த மாற்றமும் இன்றி சிம்பிலாக முடித்துவிட்டார்கள். பாடல் ஆசிரியர் ஏமாந்தவர் போலிருக்கிறது

திரைப் படம்: நினைக்கத் தெரிந்த மனமே (1987)
இசை: இளையராஜா
குரல்கள்: K J யேஸுதாஸ், சித்ரா
நடிப்பு: மோகன், ரூபினி
இயக்கம்: சுரேஷ்
http://www.divshare.com/download/16395190-71bhttp://www.divshare.com/download/16394901-a52
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்

கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போதும் காயங்களும் ஆறியதேன்
ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் வந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும் மயங்குவதேனோ என் மனது
இரு நெஞ்சின் துன்பம் இது காதல்தான் அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்

மாலை நன் நேரம் மாறிடவேண்டாம் மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிடவேண்டாம் கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும் சந்திரன் அங்கே வந்திடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும் கடலினில் கூட அலை நிற்கட்டும்
உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்
ல ல ல ல ல ல ல ல ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக