பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

நல்ல இனிமைப் பாடல்

திரைப் படம்: என்றும் அன்புடன் (1992)
இயக்கம்: பாக்யநாதன்
நடிப்பு: முரளி, ஹீரா, சித்தாரா
இசை: இளையராஜா
குரல்கள்: மனோ, S ஜானகி
பாடல்: பொன்னடியான்

நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
என்னை இழந்தேன்
செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன்
சிந்தும் கவியில்
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

நீயும் நானும் சேர்ந்ததற்கு
காதல்தானே காரணம்
காதல் இங்கு இல்லை என்றால்
வாழ்வில் ஏது தோரணம்
தீபங்களை மெல்ல மெல்ல
ஏற்றிச் செல் அன்பே அன்பே
கீதங்களைச் சொல்ல சொல்ல
ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே
அலை விளையாடும் நதியினில் ஆடி
உருகிட நாமும் சேரலாம்
சிறகுகள் வாங்கி உறவெனும் தேரில்
வெகு வெகு தூரம் போகலாம்
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

பூங்குருத்து பூங்கழுத்தில்
பூ தொடுத்து சூடினேன்
பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன்
இன்பம் என்றால் என்ன வென்று
உன்னிடத்தில் கண்டு கொண்டேன்
இன்னும் என்ன உண்டு என்று
சொர்க்கம் வரை செல்கிறேன்
அறு சுவையோடு புது விருந்தாக சுகம் பரிமாறும் தேவியே
தலை முதல் பாதம் சுகம் தரும் வேதம்
படித்திட தூண்டும் ஆவியே
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
என்னை இழந்தேன்
செந்தேன் மொழியில்
விண்ணில் பறந்தேன்
சிந்தும் கவியில்
ஒரு நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாட்டைக் கேட்கும் போதும் பார்க்கும் போதும் நடிகர் முரளி அவர்களின் ஞாபகம் தான் வருகிறது! நன்றி!

கருத்துரையிடுக