பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 டிசம்பர், 2011

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே என்றும் நீஇன்றி நானில்லை

அமைதியான, ஒரு மென்மை இழைந்தோடும் பாடல். நல்ல கவிதை வரிகளுடன்.

திரைப் படம்: பூந்தளிர் (1979)
பாடியவர்: S P B
பாடல்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
நடிப்பு: சிவகுமார், சுஜாதாவா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே
என்றும் நீஇன்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே

காதலின் ஜாடையெல்லாம்
கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ
முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே
என்றும் நீஇன்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே

தேவியின் மஞ்சள் நிறம்
வானளந்ததோ
பூமியின் நீல நிறம்
கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ


வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே
என்றும் நீஇன்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குதே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி Sir!

கணேஷ் சொன்னது…

எத்தனை முறை கேட்டாலும் எஸ்.பி.பி.யின் குரல் அலுப்பதில்லை. உங்களுக்கு நன்றி நவில எனக்கும் சலிப்பதில்லை.

கருத்துரையிடுக