பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 16 டிசம்பர், 2011

சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்

பழம்பெரும் நடிகர், பாடகர் திரு டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் வாரிசுகள் எடுத்த படம்.
T R M அவர்களின் மகள் திருமதி சாவித்திரி மகாலெஷ்மியும் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இந்தப் படம் வெளிவராத திரைப் படங்கள் வரிசையில் சேர்ந்துவிட்டது போல தெரிகிறது.
எப்படியோ வழக்கமான பாடல் வழக்கம் போல இனிமை.

திரைப் படம்: அனு (1982)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெயதேவி, ராஜா (இருவரும் புதியவர்கள் போலிருக்கு)
இயக்கம்: P N  மேனன்
பாடியவர்கள்: S P B ,வாணி ஜெயராம்

சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்

ஹா சங்கதி பேசுங்கள்
மயக்கும் கண்கள் நாலும் சேர்ந்து கவிதை எழுதுங்கள்

மாரிகால மேகம்தன்னில் ஊர்வலம் செல்லுங்கள்

வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
வானம்பாடி ஞானம் கொண்டு கானம் பாடுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்
ஆலிலை மீது கோவிலைக் கண்டு ஆடிக் கூடுங்கள்

ஆசை என்னும் நீலக்கடலின் ஆழம் பாருங்கள்
பாலில் ஊறும் கனியைப்போலே அன்பினில் ஊறுங்கள்

பாதிக்கண்ணில் பார்த்துக்கொண்டே வேதம் படியுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்
ஓரடி முன்னும் ஓரடி பின்னும் காலடி போடுங்கள்

ஊஞ்சல் போலே ஒருவர் தோளில் ஒருவர் ஆடுங்கள்
ஆறடிக் கூந்தலை பஞ்சணை ஆக்கி ஆனந்தம் கொள்ளுங்கள்

ஆதிக்கால மனிதரைப்போலே பாஷை பேசுங்கள்
சந்தன காட்டினில் மல்லிகை பூத்தது மங்கல வாசங்கள்
சாயங்காலம் பௌர்ணமி நிலவில் சங்கதி பேசுங்கள்
ஹா சங்கதி பேசுங்கள்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்விற்கு நன்றி Sir!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

கருத்துரையிடுக