பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்

சமீபத்து பாடல்களில் இந்த பாடல் நல்லதொரு பாடல். அமைதியான இசையில் தெளிவான குரலில் பாடியிருக்கிறார்கள்.

இங்கே இரண்டு பாடல்கள் (ஆண் குரல் மற்றும் பெண் குரல்களில்) அடுத்தடுத்து வருகின்றன.

திரைப் படம்: வருஷமெல்லாம் வசந்தம் (2002)
இசை: சிற்பி
குரல்: உன்னி மேனன்
நடிப்பு: குனால், மனோஜ், அனிதா
இயக்கம்: ரவி ஷங்கர்Listen Music - Audio Hosting - enge antha vennilaaUpload Music Files - Upload Audio - enge andha vennila (sujatha)...


ந ந ந ந ந ந ந
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

கல்லை கனியாக்கினாள்
முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

தையாரே தைய தைய தையா
தையாரே தைய தைய தையா

தரையில் நடந்த நான்
வானில் பறக்கிறேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
இரவாய் இருந்த நான்
பகலாய் மாறினேன்
உன்னால் தானம்மா உன்னால் தானம்மா
எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கென தருவது வரம் எனக்கு
நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன
நீதான் எந்தன் ஒளி விளக்கு
என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு
எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா

ஆ ஆயியயே அயியா அயியயா
மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய்
வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய்
தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய்
சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய்
நதிகளில் மீன்கள் நீந்துதம்மா
அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா
உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா
அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா
நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன
காதல் எனக்கு போதுமம்மா
என் காதல் எனக்கு போதுமம்மா

எங்கே அந்த வெண்ணிலா
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள்
முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலாகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக